Our Leaders of India Makkal Munnedra Katchi
banner of India Makkal Munnedra Katchi
Our Head of India Makkal Munnedra Katchi
இந்தியனே இனம்!
தாயகமே மதம் !!
உழைப்பே தெய்வம் !!!
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் கொள்கைகள்
1. வறுமையை ஒழிக்கவும், ஜனநாயக உரிமையை மீட்கவும், ஏழ்மையை போக்கவும், உழைப்பதே இக்கட்சியின் உயரிய நோக்கமும் கொள்கையும்.
2.அனைத்து மக்களுக்கும் அதிகாரமும், அதிகாரத்தை பரவலாக்கவும்,இவை கடைசி நிலையில் வாழும் மக்கள் வரை கிடைக்கச் செய்யவும் வறுமையில் வாழும் இப்படிப்பட்ட மக்கள் அரசியலில் பங்கு கொண்டு சேவையற்றவும், வறுமையும், ஏழ்மையும் முன்னின்று வளம் காண வழி தேடுவதே இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் நோக்கமாகும்.
3.சமூக மாற்றத்திற்காக சமதர்ம சமுகத்தை அமைக்கும் விதமாகவும் கடைசி நிலையில் வாழும் மக்கள் வரை சம உரிமை கிடைக்கப் பெறச் செய்வதே நோக்கமாகும்.
4.ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், மிக சிறந்த ஆளுகையை செயல்படுத்தவும், அரசியலில் அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டும் விதமாகவும், அரசியல் தொடர்ச்சியாகவும், புரட்சியாகவும், நல்ல ஒரு அரசியலை உருவாக்கும் இயக்கமே இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் கொள்கையாகும்
5.கிராமங்களில் வாழும் மக்கள் வரை கல்வி, அறிவு கிடைக்கவும் , அறியாமையைப் போக்கவும், வறுமையிலும்,ஏழ்மையிலும், வாழும்மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், சுகாதாரத்தை பேணிக்காக்கவும் , மேம்படுத்தவும், அனைவரிடையே ஒற்றுமையை வழியுறுத்துவதே நோக்கமாகும்.
6. அனைத்து மக்களுக்கும் சமஉரிமையும், பாதுகாப்பும் கிடைக்கவும், சாதி, சமயம், இனம், பால், பிறப்பிடம், எதேனும் ஒரு காரணத்திற்காகவும், பிரிவினையற்ற சமூகத்தை, வலியுறுத்தியும் மக்களின் போரட்டத்திற்கு பரிணாம தொடர்ச்சியாக இக்கட்சி உழைக்கும்.
7. இக்கட்சியானது இந்திய அரசியல் சாசனத்தை மதித்தும், தேசப்பற்றும் நிறைந்து, அனைத்து மக்களிடையேயும் நல்லுணர்வோடு நேசக் கரம் கொடுத்து சேவையாற்றுவதே நோக்கமாகும். உலக நாடுகளில் இந்தியா வல்லரசாக அமைய இக்கட்சி பாடுபடும்.
8. அரசியல் ஏற்றதாழ்வு இன்றி பங்கு கொள்ளவும், மக்கள் நலனில் நேர்மையாக உழைப்பவர்க்கே , முன்னுரிமை அளித்து அவர்களின் சேவையைப் பாராட்டி உயர்விக்கும் மக்களின் குறைகளை கண்டறிது, தீர்வு காணும் வகையில், இயக்கத்தை வலுச் சேர்க்கும் வகையில், விரிவான முறையில் பொதுக்கூட்டங்கள் முலம், மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.
9. அரசியலில் சுயநலச் சேவையும், சுரண்டல்கள், வன்முறை,தீவிரவாதம், ஊழல்கள், மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுபவர்களுக்கும், மக்கள் நலனுக்கும், முன்னேற்றத்திற்கு, இடையூறு செய்தாலோ, பொதுச்சொத்துக்களுக்கு பாதகம் விளைவித்தாலோ, அவர்களுக்கு எதிராக இக்கட்சி குரல் கொடுக்கும்.
10. நீர், நிலம், மாசு அடையாமல் பாதுகாக்கவும், இயற்கை வளங்களை மேம்படுத்தவும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் விதமாகவும், அதனால் மக்களுக்கு ஏற்படும், இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், அவசர உதவிகளும் இயன்றவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தும், உடனடி நிவாரணம் கிடைக்கவும், அரசினை வலியுறுத்தி குரல் கொடுக்கும்.
11. அரசியல் சேவையாற்றும் மற்ற இயக்கங்களை குற்றம், குறைகளை சொல்லி, வீணான நேரங்களைச் செலவழிக்காமல் மக்களுக்கு அலைச்சல்களையும், மனஉளைச்சலையும் எவ்விதத்திலும் ஏற்படுத்தாமல், வீண் விரையச் செலவுகளுக்கு ஆட்படுத்தமலும், அமைதியான முறையில், நேர்மையான வகையில் எளிமையான முறையில், கூட்டங்கள் நடத்தி, எடுத்துச் சொல்லியும், மக்கள் குறைகளை கண்டறிந்து, நிவாரணம் கிடைக்க முன்னெடுத்துச் செல்லும், மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு காணும் நோக்கமாக இயங்குவதே இக்கட்ச்சியின் கொள்கையாகும்.
12. தமிழ்நாட்டில், இக்காட்சியைப் பற்றிய விழிபுணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நிர்வாகிகளை, குழுக்களாக நியமனம் செய்து, மாவட்டங்கள், மாநகராட்சிகள், ஒன்றியங்கள் நகராட்சிகள், மேலும் கிளைகளாக கிராமங்கள்தோறும் ஏற்படுத்தி இப்பணியை மக்களிடம் இக்கட்சியின் கொள்கையையும், நோக்கங்களையும் பரவும் விதமாக சொல்லி மக்களோடு மக்களாய் கலந்து மக்கள் குறைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகாண மேற்கண்ட குழுக்கள் முன்னெடுத்து செல்லும்.
13. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், மகளிர் நலன்களுக்கும், அவர்களது உரிமைக்கும், தொழில் வளர்ச்சிக்கும், போதிய பாதுகாப்பு கிடைக்கப் பெறவும், உழைப்பாளர்களுக்கும், திருநங்கைகளுக்கும், பாதுகாப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும், ஏழை தொழிலாளர்களை, அடிமைத் தொழிலில் இருந்து மீட்கவும், அரசின் திட்டங்கள் யாவும் மக்களுக்கு நேராகச் சென்றடையவும், அவர்களின் ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும், உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் அவர்களது நலனுக்கும், உழைப்பதே இக்கட்சி கொள்கையாக கொண்டுள்ளது.
14 - மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எடுத்துக் காட்டினை முன்வைத்து அரசியல் சேவையில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், சுயநல பற்றற்றும் உயர்வு, தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமலும் பலன் கருதாமல் உழைப்பதே மக்கள் சேவையாக இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் நோக்கமாகும்
15 - நாட்டிற்கு உயர்வும், மக்களுக்கும் வளர்ச்சியும் ஏற்படவும் வறுமையில் வாழும், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம், கல்வி இலவசமாக வேண்டும். விவசாயம் பெருகவும், நீர் நிலைகளைப் பெருகவும். விவசாய கூலிவேலை செய்பவர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் உதவிட பெரும் பாலமாக விளங்கும்
16 - மக்கள் தேவையறிந்து சேவையாற்ற வழிகான்போம். கல்வி, மருத்துவம், உழைப்பில் சமத்துவம் ஏற்படவும் பொது வாழ்வில் பேதங்களை களைத்து ஒன்றுபட்டு உழைத்து, அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும் வளம் மிக்க இந்தியா வாக அயராது உழைத்திட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியில், அனைத்து பொது மக்களும் இளைஞரும் மகளீரும் ஏழ்மையையும், வறுமையும் போக்கிட இணைத்து சேவையாற்றி ஜனநாயக உரிமையை மீட்டு எடுக்க இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் சார்பாக அன்போடு அழைக்கிறோம்